எங்கிருந்தோ
நினைவை
அள்ளி தூவி
நனைக்கின்றாய்
மனதை
மார்கழி குளிராய்
எண்ணங்களுக்கு
பஞ்சமேயில்லை
உனக்கான ரசனையில்
தொடர்கிறது
முற்றுப்புள்ளி இன்றி
நினைக்க நினைக்க
இனிமையாய்
புன்னகையால் என்னை
அணைத்து கொள்கிறாய்
உனக்குள்ளே தொலைந்து
நீயாய் ஆகின்றேன் நான்
நிமிடங்களென்ன
நீண்ட காலமென்றாலும்
காத்திருப்பேன்
எதிர் பார்த்திருப்பேன்
நீள்வது உன்னினைவென்றால்
உனக்காக
இரவு பேசும் மொழி
காதலின் நிசப்த காமத்தில்
வெளிப்படுகிறது
பூவுக்குள் உணர்ந்த
அன்பை பூகம்பமாக்கிவிட்டு
தடயமே இல்லாமல்
தானே அழித்துவிட்டது
காலம் ரணமாகிப்போன
இதயத்திற்கு
ஒத்தடமாய் இருப்பது
உன் நினைவு மட்டுமே
ஓர் ஒருங்கிணைந்த
விரல் தொடுதலில் கூட
சுவாசம் தீயாக மாறுகிறது
அருகில் இல்லாத நேரமே
காதலின் ஆழத்தை உணர்த்துகிறது
அடிக்கடி
உனை தேடுகிறேன்
பொழுது போகாததால்
அல்ல நீயே
என் பொழுதென்பதால்
என் கவிதைகளின்
தலைப்பு நீ
உன் கவிதைகளின்
வரிகள் நான்
💖 பக்கம் 328 / 478
📋 Copied