மௌனம் பேசும் நேரங்களில்
உருவாகும் இணைப்பு தான்
ஆழமான காதல்

விட்டு செல்கிறேன்
பாத சுவடுகளை
பயணம் முடியுமுன்
தொடர்ந்திடுவாய்
என்றே

நிழலாக இருந்தவளின் நினைவுகள்
கனவில் வசந்தமாக மாறின

நினைவுகளில் மட்டும்
வாழும் காதலுக்கு
பிரிவே ஒரு சிறை

காதல் வந்தது என
உணர்ந்ததே இல்ல
ஆனால் அது போன பிறகு
வெறுமை மட்டும் தெரிந்தது

மௌனம் கூட
காதலுடன் காதலிக்கிறது

மூடப்படாத கண்கள் கூட
அவன் நிழலை தேடித்தான் காணும்

எனக்கு பிடித்து
செய்ததை விட
உனக்கு பிடிக்கும்
என்று செய்ததே அதிகம்

முகம் நிமிராமல்
ரசிக்க வைக்கும்
மன அழுத்தமே காதல்

இரவு நேரங்கள் கூட
உன்னைவிட
நெருக்கமாகத் தெரியவில்லை