அருவமான உணர்வு தான் காதல்
ஆனால் அதுவே வாழ்வின் வடிவம்

கண்களில்
காதலை கலந்து
பார்வையால்
ஏற்றிய ஜோதி
அணையாது
ஆடிக்காற்றிலும்
நீ அணைக்காமல்

கதவை
திறக்க மோதும்
காற்றாய்
உன் வாசனை
தீண்ட
கொள்ளை போகுது
மனம்

விரல் ஓசையில்
விருதும் கிடைக்காது
ஆனால் காதலியின் மூச்சின்
துடிப்பில் வாழ்கின்றேன்

மனதை புரிந்தும்
வலியை தருகிறாயே
என்ற வருத்தமிருந்தாலும்
உன்னை கோபிக்கவோ
வெறுக்கவோ
எப்போதும் துணிந்ததில்லை
இந்த மனம்
அத்தனை காதல் உன்மீது

பார்வைகள் சந்திக்கும் தருணமே
ஆயிரம் வார்த்தைகளின்
அர்த்தம் சொல்லும்

என் கவலைகளை
கேட்க வேண்டாம்
உன் பார்வை
மட்டும் போதும் ஆறுதலுக்கு

மௌனமாக
நீர் ஒட்டும் கண்ணொட்டம்
ஒரு வாழ்நாளுக்கு
காதல் பாவனையாகிவிடுகிறது

அள்ளிக் கொள்கிறேன்
எனக்கான தாகமென
உன் நேசத்தை

யாசகமும் ஏனடா
யோசிக்காமல் தருவேனே
என் சுவாசத்தையும் கூட
ஏந்தி கொள்வது
நீயென்றால்