சொல்லாமலே
புரிந்து கொள்ளும் கண்கள்
வாழ்நாளெல்லாம்
பிடிக்கத்தான் செய்யும்
சொல்லாமலே
புரிந்து கொள்ளும் கண்கள்
வாழ்நாளெல்லாம்
பிடிக்கத்தான் செய்யும்
அழகில் மட்டும் இல்லை
ஆசையில் அழகு என்னும்
புதையல் இருக்கிறது
மௌனமாக பார்த்த
அந்த கண் ஜோடி
ஒரு ராத்திரியை
கவிதையாக்கிவிட்டது
சரியானதும்
பிழையாகாதா
என்றேங்குது மனம்
உன் திருத்தத்திற்காகவே
எத்தனை புயலடித்தாலும்
இதய கதவை எனக்காக
திறந்தே வைத்திருக்கிறாய்
என் மனமறிந்து
எட்டிப்போக
எத்தனித்தாலும்
எனை கட்டிப்போடுகிறது
உன் கரங்களின்பிடி
மனதில் மறைக்க
தெரிந்த எனக்கு
கண்களில்
மறைக்க தெரியவில்லை
உனை ரகசியமாய்
ரசிப்பதை
நிஜமென்றால்
கடந்துவிடும்
கனவென்றால்
கலைந்துவிடும்
நினைவில் மட்டுமே
மிதக்கும்
நீங்காத உன் நினைவு
நிம்மதியாய்
பணிக்காற்று குளிரும் இரவின்
இருளும் என்னை தனிமையாக்கிய
போதெல்லாம் நீயும் நானும்
நிலவின் நிழலில் கட்டி
அணைத்தபடிநின்ற நினைவுகள்
என்னை தேற்றுதடி
மணல் தரையில்
தடம் அழிந்த
போதும்
என் மன தளத்தில்
ஆழமாய்
தடம் பதித்தே
தொடர்கிறாய்
அழகாக பயணத்தை