உன் கண்களில்
காதல் இருக்கிறது
ஆனால் உன் பார்வையில்
ஆசை மறைந்து கிடக்கிறது
என் மனதில்
பூத்த மென்
மலர் நீ
நான் நுகரும்
(சு)வாசமாய்
என்றும்
உதிரா நேசமாய்
ஆளும்
உன் காதலில்
நானும்
உன் கைதி தான்
என் ஆயுளெல்லாம்
தேன் பருக
மலரை சுற்றி வரும்
வண்ணத்துப் பூச்சி போல
உன் காதல் தேடி
உன்னையே வட்டமிடும்
காதல் பூச்சி நான்
அகிம்சையும்
ஜெயிக்குமென்று
உணர்ந்தேன்
உன்னிடம்
தோற்ற போது
காதல் களத்தில்
தோளில் சாயும் நிமிடம்
வாழ்க்கையின்
பாதுகாப்பு போல இருக்கிறது
தொட்டதுமே
நடனம் ஆடும் மனது
அதுவே காதல்
தொடாத தொடுதலே
நரம்புகளை கிளரச் செய்து
ஆசையின் அலைகளை
எல்லைகளைக் கடக்கச் செய்கிறது
கண்களில் தெரியாத மின்சாரம்
உடல் முழுவதும் ஓடுகிறதே
மௌனமான இரவுகள் கூட
ஆசையின் குரலில் விழிக்கின்றன
💖 பக்கம் 275 / 478
📋 Copied