தோளில் சாய்ந்து
விழிக்கின்ற காலையில்
சூரியன் கூட
என்னைத் தொட்டு
விழிக்க விட மறுக்கிறான்
உன் சிறு சிறு
சந்தோஷங்களில்
என் பெரும்
மகிழ்ச்சியும்
மாயைக்கு மயங்காத
மனம்
மூழ்கி போனது
மாய உலகுக்குள்
காண்பதிலெல்லாம்
நீயென்பதால்
பார்வை மோதும் தருணத்தில்
உலகம் மறைந்து போகிறது
காதல் ஒரு ஒளி
அது இருள் நிறைந்த
இதயத்திற்கே வெளிச்சம் தரும்
அந்த ஒரு புன்னகை
மூச்சை நிறுத்தி
காலத்தை உறைக்கும்
மேகத்தை கலைக்கும்
காற்றாய் கலைக்கின்றாய்
மூச்சு காற்றில் மோகத்தை
உதிர்ந்த சருகும்
உயிர் பெற்றது
உன் பார்வை
தீண்ட
நிமிடங்கள் பேசாத
நாளில் கூட
நினைவுகள்
உரையாடுகின்றன
அலைப்போல்
துள்ளி எழுந்து
பனிப் போல்
உருகுதே எனதுள்ளம்
உனை கண்டதும்
💖 பக்கம் 267 / 478
📋 Copied