நெற்றியில் பொட்டிட்டு
கொள்ளும் போதெல்லாம்
உன் இதழிட்ட
திலகம்
பௌர்ணமியாய்
ஒளிர்கிறது மனதில்
ஒரு நினைவின் மீது
வீழும் புன்னகை
காதலின் ஆரம்பம்
அதிகாலை ஆதவனாய்
ஆழ் மனதுக்குள்
தோன்றி
உறக்கத்தயும் கலைத்து
விடுகின்றது
உன் நினைவு
பார்வையின் சுருக்கத்தில் கூட
பாசம் எழுந்து
உயிரை அமைதியாக
தழுவிக் கொள்ளும்
தோளில் சாய்ந்து
உருகும் கணம்
ஆயிரம் பிரபஞ்சங்களை
மறந்து விடும்
கண்ணனின் தனிமைக்கு
குழல்போல்
என் தனிமையில்
இசைக்கிறது
புல்லாங்குழலாய்
உன் நினைவுகள்
மனதை மயக்கியே
இந்த நேசம்
கூட புதுமை தான்
நித்தம் தொலைகிறதே
மனமும் உன்னில்
நீ தொலைதூரம் சென்றாலும்
தொலைபேசியின் தொடர்பில்லாமல்
இருந்தாலும் தொடர்ந்து தொல்லை
செய்துகொண்டுதான் இருக்கிறாய்
உன் நினைவுகளால்
மழை தொட்ட
மண் வாசனை போல
அவளின் நினைவு
இதயத்தில் கலந்திருக்கிறது
காதல் வந்தபின்
மனம் சிறிய விஷயங்களிலும்
மகிழ்ச்சி காண்கிறது
💖 பக்கம் 228 / 478
📋 Copied