தந்தையின் பாசத்தில்
தவழ்ந்த மனம்
உன்னிடமும்
அதையே
எதிர் பார்க்கின்றது
சிறு குழந்தையை
போல்
தந்தையின் பாசத்தில்
தவழ்ந்த மனம்
உன்னிடமும்
அதையே
எதிர் பார்க்கின்றது
சிறு குழந்தையை
போல்
காலமும்
கண்ணாமூச்சி
விளையாடுகிறது
தூரத்தில்
உன்னை வைத்து
என் மனதோடு
ஒரு நிமிஷத்துல
என்னைய
வேணாம்னு தூக்கிப்போட
உனக்கு
எப்படி மனசு வந்துச்சு
எங்கு ஒளிந்து
கொண்டாலும்
உன் நினைவிடமிருந்து
தப்பிக்க முடிவதேயில்லை
அன்பு அழுகை
அரவணைப்பு கலந்து
தரும் காதலன் தான்
இன்று என் கணவன்
மௌனமாக உரையாடும்
கண்ணோட்டமே
ரொமான்ஸ் ஆரம்பிக்கும் இடம்
உறங்கியவளை எழுப்பி
கனவிலும் இக்காதலை
தந்து செல்லும் உன்
நினைவை என்ன செய்ய
உண்மை காதல்
என்ன செய்யும்
உணர்வுகளில் கரைந்தே
ஊமையாகி உறைந்து நிற்கும்
அருகில் நிற்கும் போது கூட
தொட்டுவிட முடியாத
நெருப்பு அது
ஏன் இத்தனை தூரத்தில்
மிகப்பிடித்தவர்களை
வைத்துவிடுகிறது
இந்த பாழாய்ப்போன காதல்