💖 காதல்
☰
💖
முகப்பு
📚
கவிதைகள்
content_copy
தொட்டுப் பார்த்த
ஆசை அல்ல
தொட்டுவிடாமல்
விட முடியாத காதல்
content_copy
இரண்டு விரல்கள்
சேரும் போது
தோன்றும் அதிர்ச்சி
காதலின் வினையெதிர் சக்தி
content_copy
இதயங்கள்
தனித்தனி என்றாலும்
உன் சுவாசம்
தீண்டவில்லையெனின்
என் மூச்சும் இல்லை
content_copy
(சு)வாசிப்பது
நீயென்றால்
கவிதையாய்
நானிருப்பேன்
content_copy
காதல் என்பது
இரண்டு இதயங்கள்
ஒன்றாக துடிப்பதல்ல
ஒரு இதயம்
அடுத்த இதயத்திற்காக துடிப்பதே
உண்மையான காதல்
content_copy
சற்றே
நீ விலகினாலும்
இருளாகுது
என்னுலகம்
content_copy
இதயத்தின் ஓசையில்
கலந்து வரும் பாசம்
காலத்தைக் கூட
அழகாக மாற்றுகிறது
content_copy
கண்கள் கூட சொல்லாத
உணர்வுகளை
இதயம் மட்டும்
மெதுவாக எழுதித் தரும்
content_copy
உன் வெற்றிடத்தை
நிரப்பி கொள்கிறேன்
நம் நினைவை
கொண்டு
நீயில்லா பொழுதுகளில்
content_copy
உன்னுடன் பேசாத
ஒரு நாள் கூட
உயிர் இல்லாத
ஒரு நாள் போல் தோன்றும்
💖 பக்கம் 193 / 478
arrow_back
arrow_forward
📋 Copied