புன்னகை தான்
சில நேரம்
காதலின் முதல் பிணைப்பு
மூச்சு காற்றின்
வெப்பத்தில்
மூட்டுகிறாய்
ஆசை தீயை
மெதுவான நெருக்கம் கூட
இரவின் அமைதியை
அலைகளாக மாற்றுகிறது
மௌனத்தில் கூறப்படும் காதல்
வார்த்தைகளை
கேட்கத் தெரியாத
மனதைப் பேச வைத்துவிடும்
விழிகள் பேசும் போது
வார்த்தைகள் தாமதிக்கின்றன
தோளில் சாயும் நிமிடம்
உலகம் அமைதியான
தங்க நேரம் ஆகிறது
தட்டி விட
விரும்ப வில்லை
ஒட்டிக் கொல்லும்
உன் நினைவுகளை
எத்தனை புயலடித்தாலும்
இதய கதவை எனக்காக
திறந்தே வைத்திருக்கிறாய்
என் மனமறிந்து
என் தேடல்களில்
எப்போதும் முதலிடம்
உன் நினைவுகளுக்கே...
முகம் மறைந்தாலும்
மனதில் மின்னும்
அந்த சிரிப்பு மறையாது
💖 பக்கம் 155 / 478
📋 Copied