நிமிடங்களென்ன
நீண்ட காலமென்றாலும்
காத்திருப்பேன்
எதிர் பார்த்திருப்பேன்
நீள்வது உன்னினைவென்றால்
உனக்காக
மூச்சு அருகில் உணரப்படும் போது
காலம் மெதுவாக நடக்கிறது
உதடுகளின் அருகே
வார்த்தைகள் முடங்கி விடும்
காதல் மட்டும் பேசும்
இதயம் தாண்டி
ஆன்மா பேசும் காதல்
அந்த அளவிலானது
புன்னகை ஒரு பார்வை
வாழ்வை முழுதும்
உருக்கக் கூடியது
அதிக கோபம் கொண்டதும்
அதை விட
அதிக பாசம் கொண்டதும்
உன்னிடம் மட்டுமே
இதயம் அமைதியாக
தங்கும் இடமே
காதலின் உண்மை அர்த்தம்
துன்பக்கடலில்
தத்தளித்த போது
துடுப்பாயிருந்து
கரை சேர்த்தாய்
நித்தம்
ஒரு யுத்தம்
காதலெனும்
ஊஞ்சலில்
உன் நினைவு
தாலாட்ட
மனமும் தள்ளாடியே
வார்த்தைகள் மவுனமாயினாலும்
இதயம் பேசும் மொழி காதல்
💖 பக்கம் 150 / 478
📋 Copied