ஆசை என்றாலே
மனதில்
நீ மலர்ந்து
விடுகிறாய்
என் மொத்த
ஆசையாய்
துறப்பதெங்கே நானும்
என் ஆசைகளை
நேற்று வரை
எதையோ தேடினேன்
இன்று என்னையே
தேடுகிறேன் உனக்காக
அருகில் இல்லாவிட்டாலும்
உன் நினைவு
என் தோளில்
சாய்ந்து உறங்குகிறது
கனவுகளை நிஜங்களாக்கி
கனவுக்குள் வைத்து வாழ்வதே
புது சுகமாகும்
இனிய காதலர் தின வாழ்த்துகள்
வீழ்த்துவது கடினமல்ல
உனை அன்பில்
ஜெயித்திட வேண்டும்
என்பதே என்னிலக்கு
காதலில் தொடுதலும்
ஒரு மொழி
காமத்தில் அது ஓர் கவிதை
எல்லாவற்றுக்கும்
காலாவதி காலம் ஒன்று
இருக்கத்தான் செய்கிறது
உன் அன்பு மட்டும்
விதி விலக்கா என்ன
சில நாள் பேசாமல் இருந்து
பார் பல பேர் காணாமல்
போய்விடுவர்
நிசப்த்த வேளையில்
உன் நினைவின்
ஓசையாய் மெட்டியொலி
மௌனமான பார்வைகளும்
உணர்வுகளால் நிரம்பி இருக்கும்
அதை உணர கூடிய இதயம் வேண்டும்
💖 பக்கம் 135 / 478
📋 Copied