மீண்டும் மீண்டும்
என்னை பார்க்க
தூண்டும் ஒரே படம்
உன் புகைப்படம்
மீண்டும் மீண்டும்
என்னை பார்க்க
தூண்டும் ஒரே படம்
உன் புகைப்படம்
விலகி இருந்தாலும்
ஒவ்வொரு துடிப்பிலும்
இருக்கிறாய் என்பதே
காதலின் வலி
கடந்து செல்கிறது
நீள் இரவு
அவள் நினைவுகளின்
துணையாலும்
இதமளிக்கும் இசையாலும்
அதிகாலை ஆதவனாய்
ஆழ் மனதுக்குள்
தோன்றி
உறக்கத்தயும் கலைத்து
விடுகின்றது
உன் நினைவு
கண்களில் தெரிந்த அந்த ஒளி
ஆயுள் முழுக்க பேசி விடும் மொழி
தொலைவில் இருந்தாலும்
நெருக்கம் தோளின் சூட்டில்
உணரப்படுகிறது
நாம் இருக்கும் இடம்
தூரமாக இருந்தாலும்
உன் மனதில்
என் மனதில்
அருகில் இருக்கிறோம்
தீண்டாமலே தீபமாகவே
கொள்கிறது சில காதல் ஆசைகள்
கையைத் தொடும் காற்றிலும்
அவளின் வாசனை தெரிகிறது
அவளது அருகில் இருந்த போது
நேரம் கூட தன்னை
கட்டுப்படுத்த முடியவில்லை