ஒரு விழிக்கு
தடை போட்டாலும்
மறு விழியில்
ரசிப்பேன்
இருவரி கவிதையாய்
உன் விழிகளை
ஒரு விழிக்கு
தடை போட்டாலும்
மறு விழியில்
ரசிப்பேன்
இருவரி கவிதையாய்
உன் விழிகளை
அருகில் இல்லாமல் கூட
நெருக்கத்தை உணர்த்தும்
உணர்வே ஆழமான காதல்
எப்பொழுதும்
பற்றாக்குறையாகவே உள்ளது
உன் அருகாமையும்
உன் காதலும்
உன் முத்தமும்
உன் தீண்டலும்
நிலவின்றி
இரவிருந்தாலும்
உன் நினைவின்றி
துடிப்பில்லை
என்னிதயத்தில்
உன் உதடுகளிலிருந்து
வரும் ஒவ்வொரு சொல்
என் மனதை
புதிய உலகத்தை
நோக்கி அழைக்கின்றது
உன் எதார்த்தமான
செயல்களையும்
ரசிக்கின்றது
மனம் எனக்காகவே
என்று
தொட்டுச் சென்ற கைகளும்
தொலைவிலே விட்டுவிட்ட
நினைவுகளும்
காதல் அதைத்தான் சொல்கிறது
தடுமாற்றம் ஏற்படச் செய்யும்
ஒரு சிரிப்பே ரொமான்ஸின் ராகம்
தடவுதலில் சிதறும்
தோல் அல்ல
நிறைந்து வீசும்
எண்ணங்களே
கண்ணால் பேசாதே
வார்த்தைகளும்
மறைந்து
கொள்கிறது
வெட்கத்தில்