தொலைவாக நீ இருந்தும்
தொடுகிறாய் நொடிக்கொரு
முறை நினைவெனும்
கரங்கள் கொண்டு

ஒருவரின் உண்மையான காதலை
புறக்கணிக்கும் ஒவ்வொருவரும்
அவர்கள் அறியாமல் தொலைக்கின்ற
ஒரு அழகான வாழ்க்கை

நீயின்றி ஒரு நாள்
கழிக்க முடியாது
என நினைக்கிறேன்
அப்போதே
என் காதல் எவ்வளவு
ஆழமோ புரிகிறது

காதலே இல்லாத
கவிதையை காதலிக்கிறேன்
நீ காதலோடு எழுதியதால்

உனை சுமந்தே
காத்திருக்கு கண்களும்
மன கதவையும்
திறந்தே
நீ வருவாயென

அவள் கண்களை
பார்த்து தான்
கவிதை என்ற பெயரில்
கிறுக்க தொடங்கினேன்
வரிகளாக அவளுக்காக

என்னிடம் பேசாதே என
சொல்வதற்கு
மட்டும்தான் உரிமை உண்டு
என்னைப் பற்றி
நினைக்காதே என
சொல்வதற்கு உரிமையே கிடையாது...

உன் காதலில் கரைகிறேன்
உன் சிரிப்பில் சிதைகிறேன்
உன் வார்த்தைகளில் வசப்படுகிறேன்
மொத்தத்தில்
உன் நினைவுகளில் நிகழ்காலமாகிறேன்

நீ என் இதயத்தில்
இல்லை என்று நினைத்தேன்
ஆனால் உண்மையில்
என் இதயமே நீ தான்

வானத்தில் மட்டுமின்றி
எந்தன் கவியிலும்
நித்தமும் ஒளி வீசும்
ஒற்றை பேரழகி அவள்