நித்திரையிலும் நிம்மதியான
உறக்கம் உன்னோடு இருப்பதாக
நினைத்து தலையணியை
அணைக்கும் போது
காதல் ஒரு மழை போன்றது
சிலருக்கு நனையத் தூண்டும்
சிலருக்கு வெறும் வெடிக்கும்
மின்னலாக இருக்கும்
நம்முடைய சூழ்நிலையை
புரிந்துக் கொண்டு
எல்லா நிலையிலும்
நம்மோடு இருக்கும்
உறவு கிடைப்பது வரம்
சில நேரம் நினைவில்
சில நேரம் அருகில்
பல நேரம் தொலைவில்
ஆனால் நீ என்றும் என் மனதில்
நீரில் மூழ்கியும்
அணையவில்லை
உன் நினைவு தீ
புதிதாய் ஏதுமில்லை
பேசிய அதே வார்த்தைகள்
மீண்டும் மீண்டும்
புதிதாய் ரசிக்க
தோணுதே
உன்னிதழ் உதிர்ப்பதாலா
பிரித்தெடுக்க முடியாத
சிக்கலாய் சிக்கிக்கொள்ள
பிடிக்கும்
உனதன்பில் அன்பே
நிழல் கூட போகாத நேரத்தில்
இதயம் மட்டும் அருகில் இருந்தது
இதழ்களின் மௌனம்
எந்த மொழியையும் விட
இனிமையாக பேசும்
காதல் கண்களில் பிறந்து
மனதில் வளர்ந்து
வாழ்வில் நிலைபெறுகிறது
💖 பக்கம் 122 / 478
📋 Copied