அருகிலில்லாத தருணமே
காதலின் ஆழத்தை அதிகரிக்கிறது

தேவை முந்ததும் நான்
யாரோ தான உனக்கு
அதான் தூக்கி எறிஞ்சிட்ட

வண்ணமாய்
மனதில் நுழைந்து
வான வில்லாயாய்
மறைந்து செல்கிறாய்
பார்வையிலிருந்து

உயிராக நினைத்த உறவுகள்
எனக்கு கொடுத்த பரிசு
கண்ணீர் மட்டும் தான்

மனதிலும்
ஒரு காதல் கீதம்
சலங்கை ஒலியாய்
உன் கரம்
மா(மீ) ட்ட

அதிக
நேசத்தை தராதே
உன் சிறு
மௌனத்திலும்
மரணத்தின் வலியை
அனுபவிக்குது மனம்

மௌன பார்வை மட்டும் போதும்
ஆசை நொடிகளை
கணக்கிலேயே தொலைக்கிறது

எண்ணத்தில் இருப்பதை
என்னில் கிறுக்கி
எனையும்
கிறுக்காக்குகிறாய்
கிராதகா

இமை கதவுகள்
உனக்காக திறந்தேயுள்ளது
விழி வீட்டினுள்
நுழைந்துவிடு
கனவு சாலையில்
நாம் இணைந்தே
பயணிக்கலாம்

விழிகள் பேசும்போது
உதடுகள் சும்மா இருக்க
கஷ்டப்படும்