எந்த தினம்
என்றாலும் அனுதினமும்
அவனுடன் இருந்தால்
காதலர்தினம் தான்
எந்த தினம்
என்றாலும் அனுதினமும்
அவனுடன் இருந்தால்
காதலர்தினம் தான்
ஒரே பார்வையில்
வாழ்க்கையை முடிவதுதான்
உண்மையான காதல்
நின்று திரும்பிப்பார்க்க
விடவில்லை நாணம்
நீ நிழலாய்
பின்தொடர்கிறாய்
என தெரிந்தபின்பும்
காதலின் தோல்வியை விட
கொடுமையான நரகம்
வேறேதுமில்லை
ஆறியபோதும்
சுடச் சுட தேநீராய்
எப்போது சுவைத்தாலும்
தித்திப்பாய் இனிப்பது
நாம் அன்பில்
கரை(ல)ந்த
இனிமையான
நிமிடங்களே
என்னை மறந்து கொஞ்ச
நேரம் உலகை ரசிக்க
நினைத்தால் அங்கும்
வந்துவிடுகிறாய் நானே
உன் உலகமென்று
இனிய காதலர் தின
வாழ்த்துக்கள் என் உயிரே
உதடுகள் அருகில்
வந்த தருணம்
உலகமே மறைந்துவிடும்
நீயோ வேராக
மறைந்து கொண்டாய்
உன் நினைவுகளோ
படர்கிறது கொடிபோல்
மனமெல்லாம்
தோற்று தான்
போகிறது
என் கோபங்கள்
உன் அன்பிற்கு முன்னால்
ஒவ்வொரு நொடியும்
காத்திருக்கிறேன் என்னவனின்
வருகைக்காக நான்