நான் உன்னை
காணவில்லை என்றாலும்
என் இதயம்
உன்னுடன் பேசுகிறது
பாசத்தில் பேசப்படாத
சில வார்த்தைகள்
நெஞ்சை நனைய வைக்கும்
சொல்லி தோத்துப்போன
காதல விட சொல்லாமலே
செத்துப்போன காதல்
தான் இங்க அதிகம்
கண்களுக்கு அருகில்
இருப்பதை விட
இதயத்திற்கு அருகில்
இருப்பது தான் காதல்
ஆசையாய்
அலங்கரித்து கொண்டாலும்
நீ ரசிப்பதை
காணும் தைரியம்
இன்னுமென்
விழிகளுக்கு இல்லை
சத்தமின்றி நடந்தாலும்
நித்தம் இம்சிக்கின்றதே
மாட்டி சென்றாயா
மனதை கொலுசில்
உனையே நினைத்திருக்க
காதல் ஒரு மழை
நனைந்தால் தான்
அதன் தணிவு புரியும்
தன்னை உருக்கி
கொண்டு
ஒளி கொடுக்கும்
மெழுகாய் நீயும்
உன் வலிகளை
தாங்கி கொண்டு
எனக்கு வழியாய்
இருக்கின்றாய்
தித்திக்கும்
உன் நினைவுகளை
சந்திக்கும் போதுதான்
காத்திருக்கும் வலிகள் கூட
காணாமல் போய் விடுகின்றது
என் கனவுகள்
நீயாக இருக்கும் வரை
என் கவிதைகள்
உன் பெயர் சொல்லும்
அது விதியின் செயல் அல்ல
நீ செய்த மாய வலை...!
(யாவும் கற்பனை)
நினைவுகளின் வழியே வந்த காதல்
அணைக்க முடியாத தீயாக
என் உள்ளத்தில் எரிகிறது
💖 பக்கம் 116 / 478
📋 Copied