சிறு பொழுது
அருகிலிருந்தாலும்
முழு பொழுதையும்
உனதாக்கி விடுகிறாய்
அன்பில்
நிறைத்து மனதை

நேற்று வரை
எதையோ தேடினேன்
இன்று என்னையே
தேடுகிறேன் உனக்காக

காதோரம் கிசுகிசுத்த
உன் குரல்
எனை காதலித்து
கொண்டேருக்கு
ரகசியமாய்

கண்ணெதிரே
நீயிருந்தால்
என்னுள்ளத்திலும்
தினமும் கார்த்திகை
தீபம்தான்
(இருளில்லா)

கொட்டி தீர்த்தாலும்
குறையாத காதல்
உனை மீண்டும் மீண்டும்
அழைக்க சொல்லி
மனதை அலையாய்
அடித்து கொசெ)ல்லுது

என் கை உன் உடலில்
தடவி செல்லும்போது
அது சத்தமில்லாமல்
எழுதும் காதல் கவிதை

மூச்சுகள் கலந்து
ஒரே சுவாசமாக மாறும்போது
தூரம் என்பது
நம் காதலில் இருக்காது

விஷத்தின்
ருசி காதல்
பிரிவில் தெரியும்

என் ஒவ்வொரு
நொடியிலும்
மறைந்திருக்கும்
சுவாரஸ்யம்
நீ அன்பே

நீ தடுக்கும்
போதெல்லாம்
தவித்து போகுது
மனம்
இனி விலகலே
கூடாதென்று
நமக்கிடையில்