காதலில் தொடுதலும்
ஒரு மொழி
காமத்தில் அது ஓர் கவிதை
காதலில் தொடுதலும்
ஒரு மொழி
காமத்தில் அது ஓர் கவிதை
நகர்ந்திடாதே
நீயும் சற்று
உறங்கி கொள்கிறேன்
நானும்
உன் விரல்களின்
பிடிக்குள்
உனக்கான வேண்டுதலில்லை
நீயென்னுள் நலமாயிருப்பதால்
இது எனக்கான
வேண்டுதலே
நீயென்றும் நலமுடனிருக்க
வேண்டுமென்று
இரவில் வீசும் காற்றிலும்
அவள் நினைவுகள்
துளிர்க்கின்றன
நேசிக்க நீயிருக்க
வேறென்ன வேண்டும்
நான் சுவாசிக்க
வாழ்க்கை படகில்
நீண்ட தூரம்
பயணிக்க வேண்டும்
அதுவும்
மௌனமாக இருக்கும்போது கூட
மனசு முழுக்க ஓர் இம்சை
காதலின் பெயரால் நடக்கிறது
என் தேடலில் கிடைத்த
மிக சிறந்த பொக்கிஷம்
நீ மட்டுமே
சொல்லவந்ததை
சொல்ல முடியாமல்
போவதிலிருந்தே
துவங்குகிறது காதல்
சொற்கள் மௌனமான
தருணத்தில் கூட
காதல் பேசுகிறது