மர நிழலில்
இளைப்பாறிய
தருணங்கள்
மனதை வருட
உள்ளமும் ஏங்குது
தலைசாய
உன் தோள்மீது
உன்னைப் போல் தான்
இம்மழையும் விட்டு
விட்டுப் பொழிகிறது
அன்பை என் மேல்
மணலில் பெயர் எழுதிய
எல்லோராலும் மணவறையில்
பெயர் எழுத முடிவது இல்லை
சுவாசத்தில் கலந்து
நிற்கும் நினைவு
காதலின் மௌனத் தடம்
சில நேரங்களில்
சிக்கிக்கொள்கிறேன்
சிந்தனைக்குள்
நீவரும் போது
காதல் வந்தால்
மனம் மெதுவாக
தன்னை மாற்றிக்கொள்கிறது
நம் காதல்
ஒரு மழை போல
தொடும்போது இன்பம்
இல்லாத போது ஏக்கம்
தேகம் பேசும் நேரத்தில்
இதயம் அமைதியாகி விடுகிறது
மழை நனைக்கும்
ஒவ்வொரு துளியிலும்
அவளின் முகம் மிதந்தது
மெல்லிய காற்றாய் வந்து
என் மனம் மெல்ல வருடிச் சென்றாய்
புயலாய் என்னை ஆழ்த்தி
காதலில் கரைத்தாய்
💖 பக்கம் 111 / 478
📋 Copied