என் கவலைகளுக்கு
நீ மருந்தாகின்றாய்
உன் கவலைகளை
மறைத்து

எந்த ஜென்மத்தில்
செய்த தவமோ
இந்த ஜென்மத்தில்
கிடைத்தாய்
நீயும் வரமாய்
என்னவனே

தொலைத்தும் பார்த்து
விட்டேன் தேடி வருகிறது
உன் நினைவு

உறங்கினால் கனவில்
வருகிறாய் உறங்காவிடில்
நினைவில் வதைக்கிறாய்
காத்திருக்கிறேன் உன்னை
விரைவில் அருகில் காண

என்னுடைய உண்மையான
அன்பை நீ உணராத வரை
இந்த பிரிவு உனக்கு
மகிழ்ச்சியாக இருக்கும்

கேட்டுபெற விருப்பமில்லை
என் இதயம் புரிந்து நீ
வருவாய் என்ற நம்பிக்கையில்
காத்து கிடக்கிறது என் காதல்

நீயிருக்கும்
இடம் மட்டும்
எனக்காகவே ஆன
ஒரு சிறிய சொர்க்கம்

எப்போதும் கொஞ்சுவதில்லை
எப்போதோ கொஞ்சியதை
இப்போது நினைத்தாலும்
மனம் கெஞ்சுது
உன் கொஞ்சலுக்காய்

இழந்து
விட்டேன் என்பதை
விட தவற விட்டேன்
என்பதே உண்மை

மாயைக்கு மயங்காத
மனம்
மூழ்கி போனது
மாய உலகுக்குள்
காண்பதிலெல்லாம்
நீயென்பதால்