காதல் என்பது
ஒட்டுமொத்த வாழ்க்கையை
மாற்றும் ஒரு சிறிய கணம்

நான் உன்னை காதலிக்கும்போது
என் இதயம் அந்த நொடியில் பூக்கும்

உன் அழுத்தமான
முத்தம்
நீ எனக்கே
எனக்கென்று சொல்லாமல்
சொல்கிறது அன்பே

சிறிய தொடுதலால்
உருவாகும் வெப்பம்
நூறு வார்த்தைகளைக் காட்டிலும்
ஆழமான காதலை சொல்கிறது

உறங்க போகிறேன்
தேடாதே என்கிறாய்
உன் கனவே நான்தான்
என்பதை மறந்து (கவுத)

மனதிலும் மத்தாப்பு
பல வண்ணங்களில்
உனை காண
கண்கள்
சந்தோஷ தீப்பொறியாய்

சிறு தீண்டலிலே
பிறக்கும் நடுக்கம்
அந்த ஆழமான
காதலின் கையொப்பம்

மெல்ல மெல்ல
பறிபோகுது மனம்
நீயெனை கொள்ளையடித்த
தருணங்களில்

உன்னை முந்தி கொண்டு
ஓடோடி வந்து
விடுகிறது
என்னை தொல்லை
செய்ய
உன் நினைவுகள்
இம்சைகளும்
இன்பமே உன்னால்

காலை ஒளிக்குள் உருகும்
காதல் அல்ல இது
இரவின் இருளிலும்
காயும் உணர்வு