தொடங்குவதை விட
தொடர்வதே
வெற்றியின் முதல் வெற்றி

நினைவுகள் நிறைந்து கொண்டே
செல்கிறது ஆனால் நிலையாய்
நிஜத்தில் பாதிபேர் கூட இல்லை

ஒரு மனிதனின்
அழகு என்பது
அவன் முகத்தில்
இல்லை
அவன் பேசும்
நாவின்
இனிமையில் இருக்கிறது

நாளைய கவலைக்கு
இன்றைய சிரிப்பை
தியாகம் செய்யாதே

சிரிப்பின் பின்னால் இருக்கும்
மௌனமே வாழ்க்கையின்
உண்மையான கதை

சிரிப்பின் பின்னால் மறைந்திருக்கும்
கண்ணீரை யாரும்
கவனிக்க மாட்டார்கள்

வாழ்க்கையை நீங்கள்
ஒரு சாத்தியமாகப்
பார்த்தால் எங்கும்
சாத்தியங்களையே
காண்பீர்கள்

ஆணாக இருந்தாலும்
பெண்ணாக இருந்தாலும்
எப்போதும் விட்டு போகாத
ஆண் பெண் நட்பு
கண்டிப்பாக இருக்கும்

சூறாவளி வந்தாலும்
மரத்தின் வேர்களை போல
உறுதியுடன் இருங்கள்

உதடு சிரிப்பது
ஊருக்கு தெரியும்
உள்ளம் அழுவது
யாருக்கு தெரியும்