பழைய பிழைகளை மறந்து
புதிய பாதையில் நடப்பதே
நம்பிக்கையின் அடையாளம்

பிரியாணி ருசியா
இல்லனாக் கூட
தாங்கிக்க முடியுது
பிரியனமானவங்க
பிசியா இருக்குறத
தான் தாங்கிக்க முடியல

கனவை நினைப்பது போதாது
அதற்காக ஒரு சிறு முயற்சியை
இப்போது தொடங்கு

வாழ்க்கை ஓர் ஓவியம்
வண்ணம் எப்படியோ
அவ்வாறே அழகாகும்

சில தருணங்கள்
கடந்து போகாது
மனதிலேயே தங்கிவிடும்

வெற்றியை நோக்கி
செல்லும் பாதையில்
வெறுப்பும் விமர்சனமும்
கற்களாக வரும்
அதை கடந்து
செல்லும் காலடிகள்
வெற்றியின் சுடரை
எரியச் செய்கின்றன

வருத்தம் என்னும் வாழ்க்கையில்
இன்பம் என்னும் வாடகை வீட்டில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

வீடு எவ்வளவு பெரியது
என்பது முக்கியமில்லை
அதில் எவ்வளவு காதல்
இருக்கிறது என்பது
தான் முக்கியம்

சில சிறந்த தருணங்களுக்காக
காத்திருக்கும் பொழுதுகளில்
பல சிறந்த வாய்ப்புகள்
நம்மை கடந்து சென்றுவிடும்

இழிவாக நினைத்தவர் முன்
இமயமாக நிற்க வேண்டும்
ஊதி என்னைத் தள்ளியவர் முன்
உயர்ந்து எழ வேண்டும்