சில பாதைகள்
குழப்பமாக இருக்கும்
ஆனால் அவை சரியான
இடத்துக்கே அழைக்கும்

கவலைக்கு நாம் இடம் கொடுத்தால்
அது நம்மை கவலைக்கிடமாக்கி விடும்

நிம்மதிக்கு எதிரி
எதிர்பார்ப்பு

வாழ்க்கை வாழ்வதில்
இல்லை நம்
விருப்பத்தில் இருக்கிறது

நம்மீது நம்பிக்கை
நமக்கு இருக்கும்
வரை நம் வாழ்க்கை
நம் வசம்

வெற்றியின் சுரங்கம்
கடந்து வந்தவர்கள்
அதன் வெளிச்சத்தை
அனுபவிப்பார்கள்

நேரம் எடுத்தாலும்
வெற்றி உன்னைத் தேடிவரும்
நீ மட்டும் நின்றுவிடாதே

எங்கு கேள்வி கேட்க
உரிமை இல்லையோ
அங்கு நீ
அடிமை படுத்தப்படுகிறாய்

நீங்கள் தேடுவது
நீங்கள் தொலைத்தவைகள்
மட்டுமல்ல உங்களுக்கு
கிடைக்காதவைகளும் தான்

மழை வராத வானமும்
காய்ந்து போகாத மனமும்
இரண்டுமே நிலைத்திராது