உன்னை தாழ்த்தும்
அனைவருக்கும்
உன் உழைப்பே சரியான பதில்

அழகான வாழ்க்கை
என்பது இல்லை
அர்த்தமுள்ள வாழ்க்கை தான்
உண்மையான வெற்றி

நாளை என்பது
வெறும் கனவு
கனவு சில நேரம்
கானல் நீரே
இன்று மட்டுமே நிஜம்
நிஜத்தோடு போராடு
கனவை மறந்து

உண்மைக்கு சற்று திமிர் அதிகம் தான்

எதிர்பார்ப்பின்றி
ஏமாற்றங்களின்றி
வாழ்க்கை துவங்குவதுமில்லை
முடிவதுமில்லை
ஏற்றுக்கொள்வதிலும்
எதிர்கொள்வதிலும்
தான் அனைத்தும்
அடங்கியுள்ளது

நம் நிலை கண்டு
கை கொட்டி சிரித்தவர்களை
கை தட்டி பாராட்ட வைப்பதே
வெற்றிகரான வாழ்க்கையின் அடையாளம்

நம்பிக்கையை
நிலையாக வைத்திரு
அது உன்னை
உயரமாக கொண்டுசெல்லும்

வீழ்வதை விட எழுவதே முக்கியம்
தோல்வியை விட மீண்டும்
முயற்சிப்பதே வெற்றிக்கு அடையாளம்

கற்பனை
நிஜம் இல்லை
என்று தெரிந்தாலும்
மனம் என்னவோ
கற்பனையை தான்
நேசிக்கிறது

உனக்கென்று ஒரு தன்மானம்
திமிர் இருக்கனும் அதை
யாருக்காகவும் எப்போதும்
விட்டுக்கொடுக்காதே