மிகச் சிறிய முயற்சிகளையும்
விடாமல் தொடர்ந்து செய்தால்
அது பெரிய வெற்றியைத் தரும்
என்ற நம்பிக்கையுடன் இருங்கள்

அன்பின்
வெள்ளத்தில் தான்
மனிதம் வாழ்கிறது

இருந்தால் நிஜமாயிரு
இல்லயேல்
நிழல் என்று கூறி
மறைந்துவிடு

வாழ்வை திட்டமிட முடியாது
ஆனால் எதிர்நோக்கி நடக்கலாம்

உலகம் அதிசயமாகவே
இருந்தாலும் மனம்
விரும்பினால் தான்
ரசிக்க முடியும்

பயணம் முடியும்
போது பாடல்
இனித்திடும்
பேருந்து பயணத்தில்

செலவழிக்க சில்லறை
கூட இல்லாத போது
தான் தெரியும் வீணாக
நாம் செலவழித்த
பணத்தின் அருமை

இப்போலாம்
பெருசா யாரும்
என்ன விட்டு
நீ முழுசா போய்டுனுலாம்
சொல்லிக்கிறது இல்ல
நமக்கான முக்கியத்துவம்
குறையும்போதே
புரிஞ்சு விலகிக்கனும்
அவ்வளவுதான்

நம் வாழ்க்கையில்
இருந்து யாரை
விலக்கி வைக்க
வேண்டும் என்பதை
சிலரின் நடத்தையே
தீர்மானிக்கிறது

தொட்டுச்செல்லும்
நினைவுகளைதான்
விடாமல் துரத்துகின்றது மனம்