சிறகுகள் இல்லாமலே
கனவுகள் பறக்கும்
முயற்சியே அதற்கு எரிபொருள்
சிறகுகள் இல்லாமலே
கனவுகள் பறக்கும்
முயற்சியே அதற்கு எரிபொருள்
ஆசை நிராசையாகலாம்
லட்சியங்கள் அலட்சியப்படுத்தலாம்
பயிற்சியில் குறையிருக்கலாம்
முயற்சியில் தோல்வியடையலாம்
ஆனால் ஆசைப்பட்ட
லட்சியங்களை அடைய
நீ செய்யும் பயிற்சியும்
அதில் வெற்றியடைய
நீ செய்யும் முயற்சியையும்
கை விடக்கூடாது என்ற
தன்னம்பிக்கை மட்டும்
இழந்து விடாதே
வெற்றி உன் காலடியில்
என்பதை மறவாதே
எதெல்லாம் வேண்டும் என்று
பிடிவாதமாக இருந்தோமோ
அதெல்லாம் வேண்டாம்
என்று நம்மையே சொல்ல
வைக்கும் இந்த வாழ்கை
அருகில் இருப்பவர்களின்
பாசத்தை உணராமல்
தொலைவில் இருப்பவர்களின்
அன்பை தேடிக்கொண்டு
இருக்கிறோம் தொலைபேசியில்
காற்றைப் போல்
தெரியாமல் நகரும் வாழ்க்கையிலும்
சில நிமிடங்கள் சுவாசமாகவே மாறும்
சிரிப்புகள் பனித்துளி போல
உருகும் முன்
ரசிக்கத் தெரிந்துகொள்
நமக்கு வரும்
பிரச்சினைகளுக்கு தீர்வும்
நம்மிடமே தான்
தேட வேண்டும்
தோல்வி வாழ்கையை மாற்றாது
ஆனால் பார்வையை மாற்றும்
வாழ்க்கையில்
நம்பிக்கை இருக்கணும்
யாரையும் நம்பித்தான்
இருக்கக் கூடாது
வாழ்கையின் இரு பகுதிகள்
எதிர்காலத்தின் கனவு
கடந்த காலத்தின் நினைவு