உன்னை
தெரிந்து கொள்
ஊரை
புரிந்து கொள்
யார் தேவை
என தெரிந்து
கொள்ளலாம்

உப்பு இருந்தால் தான்
உணவு சுவைக்கும்
அதுபோல
நட்பு இருந்தால் தான்
வாழ்க்கை இனிக்கும்

தங்கள் வீடுகளை இழந்து
அகதிகளாக அலையும்
பறவைகளுக்கு தான்
புரியும் மரங்களின் அருமை

என் அம்மா என்னை அடிக்கும் போது
இருந்த கோபத்தை விட
நான் அழுத பின்
கட்டியணைக்கும் பாசம்
தான் பெரிது

ஆசை பாசம்
வேஷம் மோசம்
ஒன்னுக்குள்ள ஒன்னுதான்

காதலித்தால்
தான் கவிதை வருமாம்
நானும் காதலிக்கின்றேன்
கவிதையெழுத தாய்மொழியை

நாளை வரும் வெற்றிக்காக
இன்று சில துன்பங்களை தாங்க நேரிடும்
ஆனால் அந்த வெற்றி
மிகவும் இனிமையானதாக இருக்கும்

புரிதல் என்பது
அன்பினால்
வருவது அல்ல
அனுபவத்தில் வருவதே

அடுத்தவர்களை கெட்டவர்களாக
சித்தரிக்க நீ அணிந்துக்கொண்ட
நல்லவன் முகமூடி
அதிக நாட்கள் நீடிக்காது
உண்மை
ஓர்நாள் வெளிப்படும்

சுமப்பதற்கான தெம்பு
அதுவாகவே வந்துவிடும்
நம்பிக்கையிருந்தால்