நாம் வெற்றி
பெற வேண்டும்
என்று உழையுங்கள்
அடுத்தவர்களை
தோற்கடிக்க வேண்டும்
என்று நினையாதீர்கள்

விலகிச் சென்றவர்கள்
திரும்பி வருவதற்காக காத்திருக்காதே
அவர்கள் போன இடத்திலேயே
உன் மதிப்பை தொலைத்துவிட்டார்கள்

தொடங்கும் துணிவு இருந்தால்
முடிவுக்கு பயமில்லை

சில வலிகள்
சொல்ல முடியாது
உணர்த்தவும் முடியாது
ஆனாலும் அவை
உள்ளுக்குள் நம்மை அழிக்கின்றன

உங்களிடம்
எப்படி மற்றவர்
நடந்து கொள்ள
வேண்டுமென
நீங்களே தான்
கற்றுக் கொடுக்கிறீர்கள்

வாழ்க்கை
மகிழ்ச்சியாக நகரும்
என்ற நம்பிக்கை
இருக்கும் நிலையில்
பணம் ஆம் பணத்தேவை
இந்த சூழல் சிலசமயம்
மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை
இழக்கவைக்கின்றது

வெற்றிக்கான வழி
எளிதானதல்ல
முயற்சிக்கும் மனதுடன்
எப்போதும் முன்னேறுங்கள்

நாளைய சூரியனைக் காண
இன்றைய இருளை
கடக்க வேண்டும்

இன்று நீங்கள் எங்களை
காப்பாற்றுங்கள் நாளை
நாங்கள் உங்களை
காப்பாற்றுகிறோம்
"மரங்கள்"

கடந்த பாதை
வலிகள் தந்ததால்
செல்லும் பாதை
வழியாக மாறியது