எல்லாத்தையும் கடந்து
செல்வதை விட
அங்கங்கே மறந்து
சொல்லுங்கள்
உடலும் மனதும்
ஆரோக்கியமாக
இருக்கும்

பேசிக்கொண்டே
இருக்கும்
உறவுகளை விட
நினைத்துக்கொண்டே
இருக்கும்
உறவுகளுக்குத் தான்
அன்பும் ஆயுளும் அதிகம்

எவருக்கும் எப்போழுதுமே
கிடைக்கும் நிலையில்
இருக்காதீர்கள்
தேடப்படும் வரை
மதிக்கப்படுவீர்கள்

வாழ்க்கையில்
அழிய கூடிய
புறத்தின் அழகு
கிடைத்தும் பயனில்லை
அழியா அகத்தின் அழகு
கிடைக்காவிட்டால்
வாழ்க்கைக்கு பயனில்லை

இனிமேல் என்கிற வாக்கியம்
இப்பொழுதே என்கிற முடிவுக்கு
இடம் தர வேண்டும்

தலைகீழாக நின்றாவது
வரவேற்று விடு உன்
நிரந்தர சந்தோசத்தை

இருட்டில் இருந்துகொண்டு
விளைவுகளை பற்றி
சிந்திப்பதை விட
வெளிச்சத்தை சந்திக்க
முயற்சிசெய்

அப்பாவின் அமைதி
மொத்த தைரியத்தையும்
உடைத்தெறிந்து விடுகிறது

பார்க்கின்ற அனைத்தையும்
மனதிற்கு கொண்டு
செல்லவும் கூடாது
மனதில் நினைப்பது
அனைத்தையும்
பேசிவிடவும் கூடாது
இரண்டும் பிரச்சனைதான்

ஏற்றுக்கொள்ள
முடியாத விசயங்களை
மாற்றி கொள்ளுங்கள்
மாற்றி கொள்ள முடியாத
விசயங்களை விட்டுதள்ளுங்கள்