பொறாமை என்பது
மற்றவர் வெற்றியை
நம்மால் ஏற்க முடியாத
நிலையில்தான் உருவாகிறது

தடை உள்ள இடத்தில் தான்
தைரியம் உருவாகிறது

பல கனவுகளோடு
வாழ நினைத்தவர்கள்
வாழ்க்கை கடைசியில்
ஒரு கனவாகவே
கடந்து போகிறது

மனம் திறந்து
பேசக்கூடிய உறவு
உடன்பிறப்புகளாலும்
ஈடுகொடுக்க முடியாத
நட்பு எனும் பெயரில்
பொதிந்துள்ள ஒரு அரிய செல்வம்

நாளைய வாழ்க்கையை
வாழ்ந்து விட
இன்றைய வாழ்க்கையை
சரியாக வாழ வேண்டும்

பிறர் ஒளிக்கே
பொறாமைப்படுபவர்
தங்களின் நிழலையும் காணமாட்டார்

வாழ்க்கை உங்களை
எங்கு அழைத்துச் சென்றாலும்
உங்கள் உண்மையான
உருவத்தை மறக்காதீர்கள்

ஒவ்வொரு உயிரும்
அன்பிற்காக
ஏங்கக் கூடியவை தான்
அதை நீ உணரும் வரையில்
உன் வாழ்க்கை நிலை பெறாது

வயிற்றை
எளிதில் நிரப்பிவிடலாம்
ஆனால் கண்ணையும் மனதையும்
திருப்தி செய்வது மிகவும் கடினம்

தலை சாயும் நிலையே
வந்தாலும் தன்மானத்தை
ஒருபோதும் இழக்காதே