ஊடலில்லையெனில் காதலும் கசக்கும்

தனிமை என்பது
ஒரு வகை போதை
ஒரு முறை அனுபவித்து
விட்டால் அதிலிருந்து
மீள முடியாது

வெற்றிக்கு தான்
எல்லைகள்
முயற்சிக்கு ஏது
எல்லைகள்

உறுதியான மனிதருக்கு
தோல்வி என்று எதுவுமில்லை
போகும் பாதையில் கற்றுக்கொள்ள
பாடங்கள் மட்டுமே உள்ளன

எதையும் விட்டு விடாதே
கற்றுக் கொள்

எதையும் எதிர்பார்க்காமல்
வாழ்வதை கற்றுக் கொண்டால்
ஒவ்வொரு நாளும் பரிசாகத் தோன்றும்

கடந்தவை
கசப்பான நிகழ்வுகளென்றால்
அதை மீண்டும்
ருசிக்க நினைக்காதே

சில வலிகள்
கண்ணீராகவும் வராது
நொறுங்கிய உள்ளமாகவே
பதிந்து போகும்

ஒருமுறை உதிர்ந்து
விட்டால் மறுமுறை
அதே அளவில்
பூப்பது இல்லை
நம்பிக்கை

ஒரு போலி நண்பர் அவர்களுக்கு
ஏதாவது தேவைப்படும்போது
மட்டுமே நினைவில் கொள்வார்