நாம் சரியாக
இருந்தால்
கெஞ்சவோ
அஞ்சவோ
தேவையில்லை

நிமிடங்கள் ஓடுவதில்லை
நாம்தான் பயம் கொண்டு
ஓடுகிறோம்

உன் பின்னால்
இருப்பவர்களுக்கு தெரியாது
நீ வகுத்தபாதை எத்தனை
கடுமையானது என்று...!

ஒவ்வொரு நாளும்
விடியும் போது
ஒரு எதிர்பார்ப்பு
முடியும்போது
ஒரு அனுபவம்

அதிகமான குழப்பம்
தவறுகளை உண்டாக்கும்
அமைதியுடன் செயல்படு

தன்னை நல்லவர்
என்று யாருக்கும்
நிரூபிக்க ஆசைப்படாமல்
இயல்பாய் இருப்பவரே
உண்மையில்
சிறந்த மனிதன்

எல்லா விசயங்களிலும்
நேருக்கு நேர்
போய் தான்
ஜெயிக்க வேண்டுமென்றல்ல
சில விசயங்களில்
விலகி நின்றாலே
ஜெயிச்ச மாதிரி தாங்க
பலருக்கும் நிம்மதி
கொடுத்த திருப்தி

சில நினைவுகள்
மறக்க முயன்றாலும் மறையாது

நாளை என்ன செய்யலாமென
யோசிக்கலாம் ஆனால்
நாளை என்ன நடக்குமோ
என யோசிக்காதீர்கள்
நிம்மதி என்பதை கெடுத்து விடும்

மலரும் நினைவுகளிலும்
சில வாடியேதான்
இருக்கின்றது