கடினம் தான் என்றாலும்
முயற்சிக்காதது தான் தோல்வி

உலகில் விலை
மதிப்பில்லாத விசயங்கள்
இரண்டு உண்டு
ஒன்று தாய்மையில்
உருவாகி மரணம்
வரை தொடரும்
உண்மையான அன்பு
இன்னோன்று
எதையும் எதிர்பார்க்காமல்
மற்றொருவர் மீது
நாம் வைக்கும் நம்பிக்கை

இவ்வாழ்வு எப்போதும்
அழுது தீர்ப்பதற்காக
அல்ல கொண்டாடி
மகிழ்வதற்காகவும் தான்

அசல் முன் நிழல் நடப்பது போல்
என்றும் என் முன் நீ நடப்பாயே
முன்மாதிரியாக அப்பா

உலகம் உனக்காக
வருந்துவதில்லை
உவகையோடு வாழ்
வானம் உனக்காக
விடிவதுமில்லை
ஆணவமின்றி வாழ்

போராடி தோற்பதும்
வெற்றிக்கு சமம்

இன்பமும் துன்பமும்
எல்லாம்
இறைவன் கட்டளையே
கஷ்டங்களை கொடுத்தவர்
அதற்கான தீர்வையும்
கொடுப்பார்
தன்னம்பிக்கையை ஒருபோதும்
சிதற விடாமல்
மன வலிமையோடு
எதிர்க் கொள்வோம்

நாம் விலகினாலும்
தேடி வந்து பேசும்
சில அன்பான உள்ளங்களுக்கு
தேவைக்காக பழகும்
சுயநலம் ஒருபோதும்
இருக்க வாய்ப்பில்லை
அன்பு ஒன்றே இலக்காக

வயதை பின்னுக்கு தள்ளி
வைராக்கியத்தோடு
வாழும்வயதானவர்கள்
ஒவ்வொரு வீட்டின்
தன்னம்பிக்கை நாயகர்கள்

கவலையுடன் உறங்கச்
செல்வது முதுகில்
சுமையைக் கட்டிகொண்டு
உறங்குவதாகும்