நீ வெற்றி பெற முடியாது
என்று எண்ணுபவர்களையே
வெற்றி பெற்ற பிறகு நினைவு கொள்
நிறம் மாறும்
பச்சோந்திகளை விட
அடிக்கடி தன் மனம்
மாறும் மனிதர்களிடமே
அதிக கவனம் தேவை
முட்டாள்கள் பேசியே
தங்களை காட்டிக் கொடுக்கிறார்கள்
அறிவாளிகள்
மௌனமாக இருந்தே
முட்டாள்களை கண்டுபிடிக்கிறார்கள்
நட்புக்கு அளவில்லை
என்றாலும்
அளவோடு இருந்தால்
நலமாகும் நட்பு
இப்பூவுலகில் உள்ள
பூக்களும் பொறாமை
கொள்ளட்டும்
நம் புன்னகையைக் கண்டு
புன்னகைப்போம் பூக்களுக்கும்
ஓய்வு கொடுப்போம
இவ்வுலகில்
நம்மை அடுத்தவர்கள்
உடன் ஒப்பிட
வேண்டாம்
நாம் விலை
மதிக்க முடியாதவர்கள்
என்ற எண்ணத்தோடு
அடி எடுத்து வைத்தால்
வாழ்க்கை சந்தோஷமாக கழியும்
ஒவ்வொரு நாள் வாழ்வும்
ஒரு பாடம்
புரிந்து கொண்டால் முன்னேற்றம்
தவிர்த்தால் பின்னடைவு
விழுந்தாலும் எழுவோன்
வெற்றியைக் கையில் பிடிப்பான்
ஒரே ஒரு தோல்வியால்
உறுதியை இழந்துவிட்டால்
நீ வெற்றியை வேண்டுமென்றே
தவறவிட்டுவிட்டாய்
குறுக்குவழி தேடாதே
உன் பாதை நீயே உருவாக்கு
📖 பக்கம் 50 / 606
📋 Copied