சிந்திக்க வைக்கும் புண்ண்கள்தான்
நமக்குள் கவிதையை எழுப்பும்

பிறர் நம்பாவிட்டாலும்
பரவாயில்லை
நீ உன்னை நம்பு

வாழ்க்கை ஒரு காகிதம் போல
நாம் எழுதும் வார்த்தைகளால்
அதின் மதிப்பு உயரும்

சிறிய முயற்சி கூட
பெரிய மாற்றத்தை உருவாக்கும்

உணர்வுகளை மீறி
செயல்படும் போது
வெற்றி தானே வந்து சேரும்

மனிதன்
துன்பப்படுவதற்கு முன்பு
கல்லாகவும்
துயரங்களுக்கு பின்பு
மீண்டும் தன்னைத் தானே
உருவாக்கிக் கொள்வதில்
சிற்பியாகவும் இருக்கிறான்
(யதார்த்தம்)

வாழ்க்கையின் வழிகள்
குழப்பமாக இருக்கலாம்
நடக்கும் பொழுது தான் புரியும்

மனம் பணம்
அதிகம் நேசித்தால்
நிம்மதி போயிரும்

ஒருவரை மன்னித்துவிடும்
அளவிற்கு நல்லவராக
இருங்கள் ஆனால் அவரை
மீண்டும் நம்புமளவிற்கு
முட்டாளாக இருக்காதீர்கள்

ஆசை பாசம்
வேஷம் மோசம்
ஒன்னுக்குள்ள ஒன்னுதான்