மற்றவரைப் பார்த்து
ஒப்பிடுவது நம்மை
சோர்வடையச் செய்யும்
நம்மையே நம்புவது
நம்மை வலிமையாக்கும்

வெற்றி கிடைக்காமல்
இருந்தாலும்
அதற்கு ஏற்ற உழைப்பு
ஒரு வெற்றியே

எதையும் மறக்க முயற்சித்து
நிம்மதியை இழக்காதீர்கள்
அதை அதை அப்படியே
விட்டு விடுங்கள்
காலம் மாற்றிவிடும்

இருள் வந்தால் பயப்படாதே
அது ஒளிக்கு
வழி செய்கிறதென நம்பு

நாம் எப்படி
இருக்க வேண்டும்
என்பதை
நம் எதிரே
நிற்பவர்களின்
குணங்களும் செயல்களுமே
தீர்மானிக்கிறது
நாம் அன்பாக இருப்பதும்
திமிராக இருப்பதும்

இருந்தால் நிஜமாயிரு
இல்லயேல்
நிழல் என்று கூறி
மறைந்துவிடு

எத்தனை அவமானபட்டாலும்
அன்பு இல்லாத இடத்தை
நோக்கியே மனம்
குழந்தையாய் ஓடுகிறது

வழிகாட்டியாய் யாரையும்
நம்பி பயணித்தல் சிறப்பு
வழித்துணையாய் யாரையுமே
நம்பி பயணித்தல் சிறப்பல்ல

எந்த உறவுமே உங்களை
ஏமாற்றியதில்லை எனில்
நீங்கள் இன்னும் யாரிடமும்
உண்மையாக பழகவில்லை
என்று அர்த்தம்

தாமதமான வெற்றியே
நிலைத்த வெற்றிக்கு அடிப்படை