சிரித்துக்கொண்டே
கடந்து விடு
உன் கஷ்டங்களை
மட்டுமல்ல கஷ்டத்திற்கு
காரணமானவர்களையும்

வெற்றியின் இனிமை
கசப்பான போராட்டங்களின்
பின்பு மட்டுமே உணரப்படுகிறது

கோடி கற்களுக்கு மத்தியில் இருந்தாலும்
வைரக்கல் மங்கி விடுவதில்லை

காயப்பட்டாலும் சரி
காயப்படுத்தினாலும் சரி
கலங்குவது என்னவோ
கண்கள் தான்

எதையும் ஏற்றுக்கொள்ளும்
பக்குவம் வரும் போது தான்
மனம் இலகுவாகிறது

நம்மை நாமே
தேடுவது
வாழ்க்கை அல்ல
நம்மை நாமே
உருவாக்கிக் கொள்வது
தான் வாழ்க்கை

வழிகள் இன்றி கூட
வாழ்க்கை அமைந்து விடலாம்
ஆனால் ஒரு போதும்
வலிகள் இல்லாமல்
வாழ்க்கை அமைந்து விடாது

ஒருவரால்
நிராகரிக்கபடும் அன்பு
மற்றொருவரால்
கொடுக்கப்படலாம் அன்பு
என்றும் அனாதையல்ல

சோகத்தில் பேசப்படும் மெளனம்
உரையாடலைவிட ஆழமாய் பதியும்

பிறர் வெளிச்சம்
உன்னை சுடுகிறதே என்றால்
நீ இன்னும்
மின்னவில்லை என்ற அர்த்தம்