வந்ததை வரவில் வைத்து
சென்றதை செலவில் வைத்து
இருப்பதை கொண்டு
மனநிறைவோடு
இன்பமாக வாழ்வோம்

நேற்றைய உங்களையும்
இன்றைய உங்களையும்
ஒப்பிட்டு பாருங்கள்
வாழ்க்கையில்
முன்னேற்றம் கிடைக்கும்

நீ செல்வதற்கு பாதையை
தேடாதே பாதையை
நீயே உருவாக்கு

தோல்வி கற்றுக் கொடுக்கும் பாடம்
வெற்றிக்குப் பெரிய முதலீடு

நேற்றைய நினைவுகளை
நினைத்துஎண்ணி
நாளைய கனவுகளில்
மூழ்கி
வாழும் வாழ்வின்
ஒவ்வொரு நொடி
சந்தோஷத்தையும் இழக்காதே

காலங்கள் கடந்து போகும்
காயங்கள் ஆறி விடும்
இப்படி சொல்லிக் கொண்டு
தனக்குத் தானே
ஆற்றிக் கொண்ட
காயங்கள் பல

நடிக்காமலே
இருந்துவிட ஆசை
ஆனால்
பலருக்கு என்னை
பிடிக்காமல் போய்விடுமே
என்ற எண்ணம்தான்
மீண்டும்

வாழ்வின் சுமை கனமாக இருப்பது
அதை சுமக்கும் மனம்
பலவீனமாக இருக்கிறதால்தான்

பசி அடங்கிய பின்
கிடைக்கும் உணவும்
மனம் வெறுத்த பின்
கிடைக்கும் அன்பும்
பயனற்றது

படிப்பு கற்றுத்தருவதை விட
சில உறவுகளின் நடிப்பு
சிறப்பாக கற்று கொடுக்கின்றது
வாழ்க்கையை