அடுத்தவர் பார்வையும்
உன் பார்வையும்
ஒன்றாவதில்லை
உன் பார்வையில்
தெளிவாய் இரு
அடுத்தவர் பார்வையும்
உன் பார்வையும்
ஒன்றாவதில்லை
உன் பார்வையில்
தெளிவாய் இரு
எடையற்ற மனது தான்
எவ்வளவு கனங்களை
தூக்கி சுமக்கிறது
காரணம் இல்லாமல்
கவலை கொள்ளாதே
காரணம் இருந்தாலும்
கலக்கம் கொள்ளாதே
எதுவும் கடந்து போகும்
தொலைவின் தேடல்கள்
எல்லாமே அருகில்
இருந்த போது
தொலைக்கப் பட்டவையே
ஆறுதல் ஏதுமின்றி
அழுது முடித்த பின்பு
வரும் நம்பிக்கைக்கு
பலம் சற்று அதிகம் தான்
பிரியத் தான் போகிறோம்
என்பது முன்பே
தெரிந்திருந்தால்
ஒருவர் மீது ஒருவர்
பிரியப்படாமல் இருந்திருக்கலாமே
காயங்களை உருவாக்க
கத்திகள் தேவையில்லை
புரிதலற்ற வார்த்தைகளே
போதும் காயங்களை ஏற்படுத்த
பணிந்தவன் எல்லாம்
பயந்தவன் அல்ல
எப்போதும்
நம் மனதில்
உச்சரிக்க வேண்டிய
வாக்கியம்
என்னால் முடியும்
எல்லைமீறிய கோபத்திலும்
கையிலிருக்கும் செல்போனை
விட்டெறிய கூடாது
என்றிருக்கும் நிதானம்
வார்த்தைகளில்
இருப்பதில்லை நம்பலருக்கும்