பொறாமை காட்டுவதை விட
பரிசளிப்பது உயர்ந்த பண்பாடு

எதுவும் சுலபமில்லை
ஆனால் எல்லாமே
சாத்தியம் தான்

நீ யாருக்கு வேண்டுமானாலும்
பொய்யாக நடித்து விடலாம்
உன் மனசாட்சியை தவிர
உன் மனசாட்சியிடமும்
நீ பொய்யாக
நடிக்க முயற்சி செய்வாயானால்
நஷ்டம் உனக்கு மட்டுமே

சொத்து இருக்குதுனு
சொல்லுறதுக்கும்
சொந்த உழைப்பு
இருக்குதுனு
சொல்லுறதுக்கும்
நிறையா வித்தியாசம்
உண்டு

மகிழ்ச்சி எப்போதும்
உங்கள் கையில்
தான் உள்ளது

வாழ்க்கையில் வலிகளை
அனுபவித்தவர்கள்
காட்டும் வழிகள்
எப்போதும்
சிறந்ததாகவே இருக்கும்

நிகழ்காலத்தை சரியாக
பயன்படுத்தி கொண்டால்
எதிர்காலம் நம்மை வரவேற்கும்

மௌனம் என்பது
வலியின் மொழி
ஆனால் எல்லோரும்
அதை புரிந்துகொள்ள முடியாது

மனதில் பல துன்பங்கள்
இருந்தாலும் சாரலோடு
மழையில் நனையும் போது
துன்பங்கள் கூட சந்தோசமாக
மாறி விடுகிறது

இலைகள் உதிர்ந்தாலும்
நம்பிக்கையை உதிர்க்காத
மரமாகி உயர்ந்திடு
நின் வாழ்வில்