தோல்வி வந்தால் பயப்படாதே
அது கடந்து செல்லும் வழி தான்
வாழ்க்கையின் அர்த்தம்

மனம் உடைந்தால் கண்ணீர் வரும்
ஆனால் வலிமை
மனத்திலேயே பிறக்கும்

பயணம் முடியும்
போது பாடல்
இனித்திடும்
பேருந்து பயணத்தில்

சரியான
இலக்கை தேர்வு செய்யாமல்
பூ போன்ற பாதையில்
பயணித்தும் பயனில்லை
(வாழ்க்கை பயணம்)

சொல்லில்
கூறத் தேவையில்லை
செயல்களே போதும்
நாம் அவர்கள் மனதில்
எந்த இடத்தில்
இருக்கிறோம்
என்பதை உணர

சூழ்நிலைகள் மாறும் போது
சிலரது வார்த்தைகளும் மாறும்
சிலரது வாழ்க்கையும் மாறும்
வார்த்தைகளில் கவனமும்
வாழ்க்கையில் நம்பிக்கையும்
இருப்பின்
சிறப்பான வாழ்வு நமதானது

எல்லாம் நன்மைக்கே
என்று கடந்து செல்லும்
மணப் பக்குவம்
இருந்துவிட்டால் வாழ்வில்
நிம்மதி நித்தியம் உண்டு

சிரிப்பு குறைந்துவிடும்
போதுதான் வாழ்க்கையின்
சுவாரஸ்யம் அதிகரிக்கிறது

நம்மை
புரிந்து கொள்ள
மாட்டார்களா
என்ற ஏக்கம்
புரிந்து கொண்டபின்
நமக்கே ஏமாற்றத்தை தருகிறது

நீ உன்னையே நம்பினால்
உலகம் உன்னை
நம்ப ஆரம்பிக்கும்