நிலையில்லா
நீர்குமிழியல்ல
நட்பு
அதன் உள்ளிருக்கும் காற்று
நிரந்தரமானது

யாரும் அறியாத முகம்
அனைவரிடமும் உண்டு
அது தெரியாத வரை
அனைவரும் நல்லவர்களே

நாம் யாரும்
தானே மாறுவதில்லை
யாரோ ஒருவரால்
மாற்றப் படுகிறோம்
நல்லவராக கெட்டவராக
ஏமாளியாக அப்பாவியாக
அறிவாளியாக முட்டாளாக

பிரகாசமான தருணத்தில்
எல்லோராலும்
உங்களை நேசித்திட முடியும்
இருண்ட பொழுதுகள்
வரும் போது
யார் பொய் என்றும்
புரிந்திட முடியும்
(சந்தர்ப்பவாதிகள்)

துன்பம் வரும்போது
எல்லோரின் கண்கள்
அழுது காட்டும்
சிலரின் மனமே
மௌனமாக கதைக்கும்

உன் உழைப்பை
உலகம் காணாமல் போகலாம்
ஆனால் வெற்றியை
மறைக்க யாராலும் முடியாது

ஓவ்வொருவர் வாழ்க்கையும்
அழகு தான்
வெவ்வொரு கோணத்தில்
பார்க்கையில்

முயற்சி தான் அசாதியத்தை
சாத்தியமாக்கும் மந்திரம்

ஒருவன் முன்னேற்றத்தில்
நிம்மதியற்றவனாகிறாய் என்றால்
நீ ஒரு இடத்திலும் தங்கிவிட்டாய்
என்பதற்கே சான்று

நேரத்தை வீணாக்குவது
வாழ்க்கையை
வீணாக்குவது போல