உணர்வுகளை
புரிந்து கொண்டால்
எல்லா உறவுகளும்
உன்னதமே

வார்த்தைகளால் சிதைவது
மனம் மட்டும் அல்ல
அந்த உறவும் தான்

நிஜத்தின் வலியில்
கற்பனை எல்லாம்
இறந்து போனது

வாழ்க்கை
ஒரு நேர்த்தியான வரைபடம் அல்ல
நாம் வரைந்த பாதைகளே அதன் அழகு

தங்கள் வீடுகளை இழந்து
அகதிகளாக அலையும்
பறவைகளுக்கு தான்
புரியும் மரங்களின் அருமை

கதிரவன் பிறக்கும்
ஒவ்வொரு நாளும்
புதிய பயணத்தை
ஆரம்பிக்கின்றது

எதையும்
யாரிடமும் எதிர்பார்க்காமல்
வெற்றி
தோல்வி
என்று மனம் சஞ்சலப்படாமல்
நடப்பது அனைத்தும்
நன்மைக்கே
என்று மகிழ்ச்சியுடன்
வாழ்வோம்
வாழ்க்கை வாழ்வதற்கே

வெற்றி கதவல்ல
அது ஒரு பயணத்தின்
அடையாளம்

தோல்வியின்றி வெற்றி வந்தால்
அதன் மதிப்பு தெரியாது

நேரத்தை வீணாக்காதே
அது உன் வாழ்க்கையை
செதுக்கும் சிற்பி