நம்பிக்கை உடையவர்கள்
எந்தச் சூழலிலும் சாதிக்க முடியும்

மனம் தளராத
இடத்தில் தான்
வெற்றி மலரும்

ஓவியத்திற்கு அழகு
சேர்ப்பது பல வண்ணங்கள்
அதுபோல தான் நம்
மனத்திற்கு அழகு
சேர்ப்பது நல்லெண்ணங்கள்

வளர்ச்சிக்கு
வழி தெரியாதவர்கள் தான்
மற்றவர் உயரத்தையே
குறை கூறுகிறார்கள்

நேர்மை நிலையானது அல்ல
அவ்வப்போது சோதிக்கப்படும்
பெரும் பரீட்சை

நம்பிக்கை என்பது
சூரியனை போல
அதை நோக்கி
நாம் செல்லச் செல்ல
மனச்சுமை என்ற நிழல்
நம் பின்னால் போய்விடும்

வெற்றிக்காக போராடும் போது
வீண் முயற்சி என்பார்கள்
வெற்றி பெற்ற பின்பு
விடாமுயற்சி என்பார்கள்

இன்று வலியாக
தோன்றும் முயற்சி
நாளை உன்னை
பிரபலமாக்கும்

சில தருணங்கள்
பேசாமல் இருந்தாலும்
அதில் ஆயிரம்
வலிகள் ஒளிந்திருக்கும்

உள்ளத்தில்
பார்வை ஊனமானால்
அருகில் இருக்கும்
உண்மையான
அன்பு கூட தெரியாது