உந்தன் கேள்வியில் அதிகாரம்
இருக்குமானால் நிச்சயமாக
என்னுடைய பதிலில்
திமிரின் சாடை இருக்கும்

நம் எதிர்பார்ப்பு தான்
நம்மை அதிகமாக
வலிக்க வைக்கும்

சந்தோசம் என்பது மற்றவர்கள்
முன் சிரிப்பது இல்லை
தனிமையில் இருக்கும்
போதும் அழாமல் இருப்பதே

நினைக்கிறது எல்லாம்
நடக்குறதேயில்லை
நடந்துருமோன்னு பயப்படுறது
மட்டும் கரெக்டா நடக்குது

மௌனம் என்பது
வலியின் மொழி
ஆனால் எல்லோரும்
அதை புரிந்துகொள்ள முடியாது

கிடைக்காததை எல்லாம்
பிடிக்காது என்று
சொல்ல பழகிக்
கொண்டவர்கள்
பக்குவப்பட்டவர்கள்

வேகம் எதிர்பார்க்காத
முடிவினை தரும்
விவேகம் எதிர்பார்ப்பினை
முடிவாய் தரும்

எப்போதும் உங்களால்
செய்ய முடியும் என்பதை
நம்புங்கள் அப்படியானால்
முடியாது என்ற
எண்ணம் விலகிவிடும்

உயிர் வாழக் கற்றுக்கொள்
போதும் எவ்வாறு வாழ்வது
என்பதை காலம் கற்றுத்தரும்

பேசிக்கொண்டே
இருக்கும்
உறவுகளை விட
நினைத்துக்கொண்டே
இருக்கும்
உறவுகளுக்குத் தான்
அன்பும் ஆயுளும் அதிகம்