எப்பவும் குறை மட்டும்
சொல்றவங்களுக்கு
வாழ தெரியாது வாழ
தெரிஞ்சவங்களுக்கு
குறையே தெரியாது

எப்போதும் உன்
அடையாளத்தை
யாருக்காகவும்
விட்டுக் கொடுக்காதே

எதற்கும் தயாராக
இருக்க வேண்டும்
ஒருநாள் நமக்கான
வாய்ப்பு வரும்

கடலின் ஆழம் தெரிந்தால்
நீந்தலாம்
வாழ்க்கையின் சவால்கள் புரிந்தால்
வெல்லலாம்

தாய் மடியைக் காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில் இல்லை

ஒற்றுமை மற்றும்
சுயமரியாதை மட்டும்
வாழ்க்கையை எளிதாக்கும்

காலை நேரம் வருவதெல்லாம்
இரவு நேரம் வருவதற்கே
அதுபோல
கவலைகள் வருவதெல்லாம்
சந்தோஷங்கள் வருவதற்கே

சரியாக
புரிந்து கொள்ளாவிட்டால்
கூட பரவாயில்லை
சரியாக தவறாக
புரிந்து கொள்வது
தான் பிரச்சனையே

அவரவருக்கு
நிகழாத வரை
நிகழ்வது எல்லாம்
வெறும் செய்தி தான்

சோர்வுக்கு அடியில் தான்
உயர்ந்த நம்பிக்கையின்
விதை தூங்குகிறது